யாழ்.மாநகர சபையில் அமைய அடிப்படையில் தொழில்புரியும் சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு 3 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
127 சுகாதார ஊழியர்கள் நேற்று முன்தினம் தொடக்கம் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாம் பல வருடங்களாக தொழில்புரிந்து வருவதாகவும், இது வரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும், தெரிவித்தே இவர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெத்துள்ளனர்.
தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை இந்த பணிபப்கிஷ்கரிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

