ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு கட்சி வரலாற்று ரீதியான வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

