குளியலறையில் சறுக்கி வீழ்ந்தவர் மரணம்



(அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சூரங்ல் பகுதியிலுள்ள வீடொன்றில் குளியலறையில் சறுக்கி விழுந்து கர்ப்பிணிப்பெண்னொருவர் இன்று (20) காலை உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
சூரங்கல் 05ம் வட்டாரத்தைச்சேரந்த நளீம் ஜனூபா (24வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் கிண்ணியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.