பெண்ணொருவருக்கு காலாவதியான ஊசி மருந்தை வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹட்டன் நகரிலுள்ள தனியார் வைத்திய பரிசோதனை நிலையத்தின் வைத்தியர் ஒருவர் மற்றும் மருந்தக உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வைத்திய நிலையத்திற்கு வந்த மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண், ஊசி மருந்து வெற்றியளிக்காமையால், திக்ஓய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அப் பெண்ணுக்கு காலாவதியான மருந்து வழங்கப்பட்டமை தெரியவந்தது.
இந்தநிலையில் இது குறித்து நுவரெலிய மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சம்பந்தப்பட்ட தனியார் வைத்திய பரிசோதனை நிலைய வைத்தியர் மற்றும் மருந்தக உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

