அழகன் கனகராஜ்
இதுவரையிலும் விரல் அடையாளங்களை வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய விரல் அடையாளங்களை வழங்குமாறு, சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை காலை 9.30க்கு, கூடியபோது, சபாநாயகரின் அறிவிப்பின் போதே அவர் மேற்கண்ட அறிவுரை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற, இலத்திரனியல் வாக்களிப்புக்காக இதுவரையிலும், தங்களுடைய விரல் அடையாளங்களை வழங்காத உறுப்பினர்கள், விரல் அடையாளங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

