யாழ். மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 57 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக சாவகச்சேரியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேபோல் மருதங்கேணி மற்றும் மாதகல் பகுதிகளில் கடலுக்குச் சென்றவர்கள் காணமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை, வேலணை ஆகிய பகுதிகளில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அதேபோல் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது, என அவர் கூறியுள்ளார்.