சுகாதார அமைச்சின் இணையத்தளம் முடக்கம்



சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் இணையத்தளத்துக்குள் ஊடுறுவியதாக கூறப்படும் பிரிவினர், அந்த இணையத்தளத்தை முடக்கியுள்ளனர். (ஹேக்) அந்த இணையத்தளத்துக்கு நுழையமுடியாத வகையில், பதாகையும் தரவேற்றப்பட்டுள்ளது. எம்.சி.ஏ என்ற பெயரிலான இலட்சினையும் அதில் உள்ளது. அதன் விரிவாக்கத்தில் முஸ்லிம் சைபர் இராணுவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.