நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவினாரால், இன்று கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை, எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்குச் சொந்தமான 41 வாகனங்களை தவறான முறையில் பயன்படுத்தினார் என்றும் இதனால், அரசாங்கத்துக்கு 41 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

