மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகாவித்தியாலயம் 2016 க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேறுகளின் படி 31 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லவுள்ளனர்.
இவர்களில் 3 மாணவிகள் மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கல்லூரியில் 106 வருட வரலாற்றில் இந்த வருடமே 03 மாணவிகள் மருத்துவத் துறைக்கு செல்கின்றனர்.
செல்வி.சிவரஞ்சன் சிவாஞ்சலி (மாவட்டநிலை 03), செல்வி.மயில்வாகனம் பிரியங்கரி (மாவட்டநிலை 09), இராஜபாரதி சஞ்சிதா (மாவட்டநிலை 28) அதில் சிவாஞ்சலி அதிவிசேட சித்தி பெற்று தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை விட பௌதிக உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 09 மாணவிகளும், வர்த்தகப்பிரிவில் 06 மாணவிகளும் கலைப்பிரிவில் 13 மாணவிகளும் பல்கலைக்கழகம் செல்லவுள்ளனர்.