ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை



ஹம்பாந்தோட்டையின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் நாளைய தினம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது என்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ தலைமையில் நாளைய தினம் (07) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடையுத்தரவு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை மேலும் 26 பேருக்கு இது தொடர்பில் தனிப்பட்ட முறையில் அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.