இறக்குமதி அரிசி மீதான வரி குறைவு



இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசி மீதான வரி 80 ரூபாவிலிருந்து 15 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
தீர்வை வரி, தேச நிர்மாண வரி உள்ளிட்ட மேலும் பல வரிகள் காரணமாக இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோகிராம் அரிசி மீதான வரி 80 ரூபா வரை அதிகரித்திருந்தது.
புதிய தீர்மானத்திற்கு அமைய, இறக்குமதி செய்யடும் அரிசி மீதான அனைத்து வரிகளும் நீக்கப்பட்டு, விசேட 15 ரூபா சந்தை வரியை மாத்திரம் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரித் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.