-எம்.எஸ்.எம்.ஹனீபா-
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று வந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொத்துவில் நகரிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகளில் இரவு வேளைகளில் உடைத்து பொருட்கள் மற்றும் பணம், நகைகள் என்பன திருடப்பட்டு வந்தன. நேற்று வியாழக்கிழமை (26) இரவு வீடு ஒன்றை உடைத்து திருட முற்பட்டபோது, இவர்கள் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.