பல்கலை மாணவர்கள் பிணையில்



மாலபே தனியார் பல்கலைக்கழகம் விடயம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இன்று மாலை கைது செய்யப்பட்ட அவர்கள் கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொக்ஸி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, குறித்த மாணவர்கள் அனைவரும் இரண்டு லட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதிவான் அனுமதி வழங்கினார்.