ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
2008 ஆம் ஆண்டு கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்று ராணுவ சிப்பாய்கள் நேற்று (18) காலை குற்றவிசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ மேஜர் ஒருவரும் இரண்டு சிப்பாய்களும் இதன்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கல்கிசை நீதிவான் நிதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர் கடத்தல் தொடர்பாக குற்ற விசாரணை திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

