(பதுளை நிருபர்)
வன விரிவாக்கல் உத்தியோகத்தர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான திறந்த
போட்டிப் பரீட்சை – 2016 (2017)
கல்வித்தகைமை – கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில்; தமிழ், கணிதம் மற்றும் விஞ்ஞானம் உட்பட நான்கு பாடங்களில் திறமைச்சித்தியுடன் ஒரே தடவையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். கல்விப் பொதுத்தராதர உயர்தர தரப் பரீட்சையில் ஆகக் குறைந்தது ஒரு பாடத்திலாவது சித்தியடைந்திருத்தில் வேண்டும். வயதெல்லை – 18 வயதுக்கு குறையாமலும் 30 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பப்படிவத்தின் முடிவுத்திகதி 28.02.2017 ஆகும். பரீட்சைக் கட்டணம் 600 ரூபா ஆகும். இந்தக் கட்டணத்தைப் பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் வருமானத்தலைப்பு 2003-02-13இன் கீழ் அரசாங்க வருமானத்தில் வரவு வைத்து 2017.02.28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நாட்டிலுள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகத்திலும் அல்லது உப அஞ்சல் அலுவலகத்திலும் செலுத்தலாம்.
மேற்குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக்கொண்ட உரிய பற்றுச்சீட்டை விண்ணப்பத்தில் உரிய இடத்தில் கழறாதவாறு ஒட்டுதல் வேண்டும். இந்த பற்றுச்சீட்டின் நிழற்படப் பிரதியை விண்ணப்பதாரி தம்வசம் வைத்துக்கொள்ளல் அவசியமானதாகும். விண்ணப்பப்படிவத்தின் முடிவுத்திகதி 28.02.2017 ஆகும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை “பரீட்சை ஆணையாளர் நாயகம், பரீட்சை திணைக்களம், ஏற்பாடுகள் மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைப் பிரிவு, இலங்கை பரீட்சைத் திணைக்களம், த.பெ.இல. 1503, கொழும்பு” என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும்.
அனுப்பப்படும் விண்ணப்பப்படிவத்தின் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “ வன விரிவாக்கல் உத்தியோகத்தர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2016(2017)”எனக் குறிப்பிட்டு பதிவுத்தபாலில் 2017.02.28 ஆந் திகதிக்கு அல்லது அதற்கு முன்பதாக விண்ணப்பப்படிவங்கள் அனுப்பப்படல் வேண்டும்.
உப பொலிஸ் பரிசோதகர் பதவி – விசேட அதிரடிப்படை
கல்வித்தகைமை – கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் கணிதம் மற்றும் தமிழ் உட்பட நான்கு பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஒரே தடவையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். அத்துடன் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் ஒரே தடவையில் 3 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
இப்பதவிக்கு ஆண்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம். உடற்தகைமைகள் :- உயரம் ஆகக் குறைந்தது 5 அடி 6 அங்குலமாக இருத்தல் வேண்டும். மார்பின் சுற்றளவு 32 அங்குலமாக இருத்தல் வேண்டும். வயதெல்லை – 18 வயதுக்கு குறையாமலும் 25 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பப்படிவத்தின் முடிவுத்திகதி 10.03.2017 ஆகும்.
பொலிஸ் கான்ஸ்டபில் விசேட அதிரடிப்படை
கல்வித்தகைமை – கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் கணிதம் மற்றும் தமிழ் உட்பட இரண்டு தடவைக்கு மேற்படாமல் குறைந்தது 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். இப்பதவிக்கு ஆண்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம். உடற்தகைமைகள் :- உயரம் ஆகக் குறைந்தது 5 அடி 4 அங்குலமாக இருத்தல் வேண்டும். மார்பின் சுற்றளவு 30 அங்குலமாக இருத்தல் வேண்டும். வயதெல்லை – 18 வயதுக்கு குறையாமலும் 25 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பப்படிவத்தின் முடிவுத்திகதி 10.03.2017 ஆகும்.
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் விசேட அதிரடிப்படை
கல்வித்தகைமை கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் கணிதம் மற்றும் தமிழ் உட்பட இரண்டு தடவைக்கு மேற்படாமல் குறைந்தது 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். இப்பதவிக்கு பெண்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம். உடற்தகைமைகள் :- உயரம் ஆகக் குறைந்தது 5 அடி 4 அங்குலமாக இருத்தல் வேண்டும். வயதெல்லை – 18 வயதுக்கு குறையாமலும் 25 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பப்படிவத்தின் முடிவுத்திகதி 10.03.2017 ஆகும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை “ பணிப்பாளர் (ஆட்சேர்ப்பு), பயிலுநர் ஆட்சேர்ப்பு அலுவலகம் இல. 375 1ஆம் மாடி, ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தை கொழும்பு – 06 என்ற முகவரியிட்டு, விண்ணப்பப்படிவம் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு பதிவுத்தபாலில் 2017.03.10 ஆந் திகதிக்கு அல்லது அதற்கு முன்பதாக விண்ணப்பப்படிவங்கள் அனுப்பப்படல் வேண்டும் என்பதால் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் காலதாமதமின்றி செயல்படல் வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். பொலிஸ் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் திருமணமாகாதவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பப்படிவங்களை மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் ஹட்டன் தலைமைக் காரியாலயம் பதுளை பிராந்திய காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மாவட்ட காரியாலயங்களிலும் மலையக மக்கள் முன்னணியின் அனைத்து உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை இது தொடர்பான மேலதிக தகவல்கள் எமது அனைத்து காரியாலயங்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களிடமிருந்தும், 051-–2224228, 052-–2223052, 055–-2229838, 055-–2231526 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

