அபு அலா -
திருகோணமலை மாவட்ட, மூதூர் கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளரை உடனடியாக இடம்மாற்றம் செய்யக்கோரிய ஆர்ப்பாட்டம் இன்று (21) கிழக்கு மாகாண சபையின் வளாகத்திற்கு முன் இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் கிழக்கு மாகாண தழிழ் ஆசிரியர் சங்கம் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்தியது.
இதில் மூதூர் கல்வி வலயத்தைச் சேர்ந்த சுமார் 461 ஆசிரியர்கள் சுகயீன லீவு பெற்று இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
அரசே, உயர் அதிகாரிகளே கண்ணியத்துக்குரிய ஆசான்களை மன அழுத்தத்திற்கு உட்படுத்துவதிலிருந்து பாதுகாப்புச் செய், சகல மாணவர்களினதும் கல்வி பெறும் உரிமையை உத்தரவாதப்படுத்து என்ற பல கோசங்களை எழுப்பினர்.
மூதூர் மூதூர் கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் மன்சுரை உடனடியாக இடமாற்றம் செய் இவரை இடமாற்றம் செய்யும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் கோசங்களை எழுப்பினர்.

