கேப்பாபுலவு மக்களுக்காக கிழக்கு மாணவர்கள்



கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கிலும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன்படி கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்  திங்கட்கிழமை மட்டக்களப்பு - கல்லடியிலுள்ள நிறுவக முன்றலில் நடாத்தப்பட்டது. 

வாயில் கறுப்புத் துணி கட்டியவாறு பறை மேள அறைகூவலுடன் அமைதியான முறையில் மாணவர்கள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டனர். 

இதன்போது கேப்பாபுலவு மக்களின் காணியை அவர்களுக்க வழங்கி அவர்களை நிம்மதியாக வாழவைப்பதற்கான நடவடிக்கையினை நல்லாட்சி அரசாங்கம் எடுக்கவேண்டும், அப் பகுதி மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்கி இப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.