வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில்



(க.கிஷாந்தன்)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 03.02.2017 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரையிலான 4 மணித்தியாலயங்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 03.02.2017 அன்று காலை சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சில வைத்தியசாலைகளில் மாத்திரம் வைத்திய சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டமை மேலும் குறிப்பிடதக்கது.