புனித சூசையப்பர் கல்லூரி 150 வருடத்தில்



-எஸ்.சசிக்குமார்-
 திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதனையொட்டிபல்வேறு நிகழ்வுகளை கல்லூரி சமூகம் நடத்தி வருகிறது. இதற்கமைவாக இன்று வெள்ளிக்கிழமை நடைபவனி ஒன்று இடம் பெற்றது இதில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில்,பிரதம அதிதியாக இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி ரியர்  அட்மிரல் திராவேஸ் சின்னையா மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய கிறிஸ்டிய் நோயல் இமாவேல் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.