கண்டி வத்தேகம சிறிமல்வத்த மகா வித்தியாலயத்தில் கட்டிடமொன்றில் கூரைப்பகுதி உடைந்து வீழ்ந்ததில் காயமடைந்த ஆசிரியர் உட்பட 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்றைய தினம் காலை 10.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வருடம் நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களே இவ்வாறு சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் யக்கஹபிட்டிய ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூரைப்பகுதி உடைந்து விழுந்த சந்தர்ப்பத்தில் வகுப்பறையில் 43 மாணவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலைகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

