லயனல் மெஸிக்கு சர்வதேச போட்டித்தடை



அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான லயனல் மெஸிக்கு சர்வதேச போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், சிலிக்கு எதிரான தகுதிகாண் போட்டியில் அர்ஜென்டினா விளையாடியது.
இந்தப் போட்டியின் போது, நடுவருக்கு எதிராக வார்த்தைப் பிரயோகம் செய்ததால் லயனல் மெஸிக்கு சர்தேச போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகள் நான்கில் விளையாடும் வாய்ப்பை மெஸி இழந்துள்ளார்.