யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள் விரிவுரைகளைப் புறக்கணித்து அமைதிப் போராட்டமொன்றை, இன்று காலை முதல் முன்னெடுத்து வருகின்றனர். கலைப்பீட முதலாம் வருட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வின் போது, வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உள்ளிட்ட 13 பேருக்கு வழங்கப்பட்ட வகுப்புத் தடைக்கு எதிராகவே, இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. (படப்பிடிப்பு: எஸ்.திருச்செந்தூரன், எஸ்.நிதர்ஸன்)

