(க.கிஷாந்தன்)
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்துள்ள இரண்டாவது மகளிர் தினம், 26.03.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு தலைவியும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான திருமதி. சரஸ்வதி சிவகுரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் நிலுக்க ஏக்கநாயக்க மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜப்பிள்ளை, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி, கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அட்டன் ஹைலண்ஸ் கல்லூரிக்கு முன்னால் இருந்து அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபம் வரை நுவரெலியா மாவட்டத்தை உள்ளடக்கிய மகளிர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்களின் பேரணி ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

