மூதாட்டி பலி: மாணவன் கைது



-பொன்ஆனந்தம்-
 திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதியில், மாணவன் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதுண்டு மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். பதவிய - புல்மோட்டை பிரதான வீதியின் 4ஆம் கட்டடை ருவான்புர பிரதேசத்தில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த  80 வயதான மூதாட்டி உயிரிழந்துள்ளார். 14 வயதான பாடசாலை மாணவனே மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற மாணவனை பதவிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.