மருதானை - கோட்டை ரயில் போக்குவரத்து வழமைக்கு



கொழும்பு - கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது. 

மருதானை - கோட்டைக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று ரயிலொன்று தடம்புரண்டமையால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில், ரயில் பாதைப் புனரமைப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக, ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.