திருகோணமலை-மட்டக்களப்பு பிரதானவீதி வாகரை பகுதியில் அக்கரைப்பற்றில் இருந்து சென்ற பஸ்ஸும் முற்சக்கர வண்டியும் நேற்று மாலை 5 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாகவும் தாய் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் சேறுவில பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளதாகவும் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தாயாரான திருகோணமலை-பாலையூற்று பகுதிரயைச்சேர்ந்த செறின் எடன் (54வயது) திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.