சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இலங்கை விஜயத்தை புறக்கணிக்கமாட்டார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யார் என்ன சொன்னாலும், ரஜினிகாந்த் மனிதாபிமான அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக கட்டப்பட்ட 150 வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ள வேண்டும்.
குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு அவர் உரை ஒன்றையும் ஆற்ற வேண்டும் என குறித்த இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்த் வவுனியாவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஈழம் தொடர்பில் தமிழ்நாடு முழுவதும் பல சூடான விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.
ஆனால், அது அரசியல் பிரச்சினை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் யாழ். விஜயம் தனிப்பட்டது. எனவே ரஜினி காந்தின் யாழ். விஜயத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
ரஜினிக்கு என ஒரு தனித்துவம் உள்ளது. எனவே, அவருக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும் என அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

