உணவுப் பாதுகாப்பு வாரம்  மே மாதத்தில்



வெசாக் மற்றும் பொசன் பண்டிகைக் காலமான மே மாதம் 2ஆம் திகதி முதல், உணவுப் பாதுகாப்பு வாரத்தை அமுல்படுத்துமாறு, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டாரவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் -  சிங்கள புதுவருடப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஹோட்டல் மற்றும் வர்த்தக நிலையங்களை விசேட சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மக்களுக்குத் தரமான மற்றும் சுத்தமான உணவுகளை வழங்கும் நோக்கில், சுகாதார அமைச்சரின் ஆலோசனைக்கு அமையவே, இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தது் திட்டத்தின் கீழ், புறக்கோட்டை மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள மொத்த விற்பனை களஞ்சியசாலைகள் சோதனை செய்யப்பட உள்ளதுடன், நீண்டதூர சேவையில் ஈடுபடும் பஸ்கள் நிறுத்துமிடங்களில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளும் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளன.