#சின்சினாட்டியில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி



அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின், சின்சினாட்டியிலுள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய இருவரினாலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக சின்சினாட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த துப்பாக்கிப் பிரயோகம் பயங்கரவாத தாக்குதலாக இருப்பதற்கான எதுவித அடையாளங்களும் இல்லை என பிரதி பொலிஸ் தலைமை அதிகாரி ட்விட்டரினூடாக தெரிவித்துள்ளார்.