பணிப் புறக்கணிப்புக்கு தயார்



கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து எதிர்வரும் ஏப்ரல் 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் தாம் பணிக்கு சமுகமளிக்கப் போவதில்லை என அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

தமது பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு கோரியிருந்த போதும் அதற்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரின் அசமந்த போக்குக்கு எதிராகவே இந்த தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்ததாக காமினி குமாரசிங்க தெரிவித்தார்.