புகையிரதம் மோதி ஒருவர் பலி





புகையிரத கடவையில் படுத்திருந்தவர் மீது புகையிரதம் மோதியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று (26) காலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கும், புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தவநாயகம் திரேந்திரா (வயது 28) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்தார். 

பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அத செய்தியாளர் தெரிவித்தார். 

உயிரிழந்தவர் நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றுபவர் என்றும் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.