ஏமாற்றப்பட்ட வட முஸ்லிம்கள்.



(அத தெரண)
முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையொப்பமிட்டமைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அந்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்துள்ளனர். 

மன்னார், மரிச்சுக்கட்டி, பாலைக்குழி மற்றும் கரடிக்குழி பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

கடந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட நிலையில், நல்லாட்சி அரசாங்கமும் எங்களுக்கு நல்லதை செய்யாமல், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த காணியினை கொள்ளை அடிக்கும் சூழ்சிகளை செய்துள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.