பாணந்துறை - அலுபோமுல்ல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 வருடங்களாக குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று பாணந்துறை மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்த வழக்கு தொடர்பிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

