SLvsBAN வெல்லும் அணியை SMS செய்க 0777 761477



இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (சனிக்கிழமை) தம்புள்ளையில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று 2.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் குசல் பெரேரா விளையாடவில்லை. இவருக்கு பதிலாக மிலிந்த சிறிவர்த்தன அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். அத்துடன் தனுஷ்க குணதிலகவும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
கடந்த சில காலங்களாக ஒருநாள் போட்டித் தொடர்களில் பெரிதாக எதனையும் சோபிக்காத இலங்கை அணி சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடவுள்ளது.
கடந்த 2015 ஆம் முதல் நடைபெற்ற இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுடனான இருதரப்பு தொடர்களில் இலங்கை அணி தோல்விகளை மாத்திரமே பதிவு செய்துள்ளது.
எனினும் பங்காதேஷ் அணியை பொறுத்தவரையில் ஒருநாள் தொடர்களில் சற்று வலுவான அணியாகவே உள்ளது. கடந்த ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான தொடரில் தோல்வியடைந்த போதிலும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற அணிகளுடனான தொடர்களில் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.