(Riswi)
சமூக வலுவூட்டல் அமைச்சர் S.P, திசாநாயக்க இன்று 11.04.2017 செவ்வாய்கிழமை இறக்காமம் பிரதேசத்திக்கு வருகை தந்து உணவு ஒவ்வாமையினால் ஏற்பட்ட வாந்தி காச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து வைத்தியசாலையின் குறைபாடுகளையையும் கேட்டறிந்த பின்னர் இவ் வைத்தியசாலைக்கு புதிய கட்டிடம் ஒன்றை கட்டித்தருவதாகவும் வைத்தியசாலைக்குரிய மருந்து பொருட்களும் வழங்க வாக்குறுதி அழித்தார். பின்னர் மரணித்தவர்களது குடும்பங்களுக்கு ரூபா பத்தாயிரம் வழங்கப்பட்டது அதன் பின் நான்கு பேருக்கு வீடு கட்டித்தருவதாகவும் இன் மக்களுக்கு வாக்குறுதியும் வழங்கினார்.
இதேவேளை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களின் வேண்டுகோளை ஏற்று இன்று வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்த அமைச்சர் S.B.Dissanayaka சமுர்த்தி திணைக்களத்தில் 200 பேருக்கு தொழில் தருவதாக உறுதயளித்துள்ளார்.


