புதிய அமைப்பாளர்கள்



குருநாகல் மாவட்டத்திற்கான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் கையளித்தார்.
இதன் பிரகாரம் பண்டுவஸ்நுவர தொகுதி அமைப்பாளராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
தயாசிறி ஜயசேகர இதற்கு முன்னதாக பிங்கிரிய தொகுதியின் அமைப்பாளராக செயற்பட்டிருந்தார்.
இதனையடுத்து வெற்றிடம் ஏற்பட்டுள்ள பிங்கிரிய தொகுதியின் அமைப்பாளராக தர்மசிறி தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
குருநாகல் தொகுதியின் அமைப்பாளராக ஜயரத்ன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக டிக்கிரி அதிகாரி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் தொகுதி அமைப்பாளராக செயற்பட்டிருந்தார்.
குருநாகல் இதேவேளை, குருநாகல் மாவட்ட அமைப்பாளர்களாக மூவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குணதாச தெஹிகம, அனுராத சம்பத் ஹேவகே மற்றும் எம்.எஸ்.எம். பாஹிம் ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.