எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் விஷேட போக்குவரத்து முறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் இந்த போக்குவரத்து முறை அமுலாகும் என்று பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் பஸ் போக்குவரத்து பாதைகளிலும் மாற்று வழிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
குறித்த தினத்தில் 138, 154, 176 மற்றும் 103 இலக்க பஸ்களுக்கு இவ்வாறு மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் கண்டியிலிருந்து கொழும்பு வரும் வாகனங்கள் பொலிஸாரின் அறிவித்தல்படி மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கண்டி வீதியினூடாக கொழும்பிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் பண்டாரநாயக்க சுற்றுவட்டம், இங்குருகடே சந்தி, சிறிமாவோ பண்டாரநாயக்க சுற்றுவட்டம், ஆமர் வீதி சந்தியினூடாக சென்றல் வீதி வழியே புறக்கோட்டை நோக்கி பயணிக்க முடியும் என்று பொலிஸர் கூறியுள்ளனர்.
30ம் திகதி இரவு வேளையில் கொழும்பு நகரின் பல பிரதேசங்களில் வாகனங்கள் நிறுத்தி வைப்பதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாளிகாவத்தை, பேஸ்லைன் வீதி, சரணங்கர வீதி மற்றும் கொம்பனிவீதி ஆகிய பிரதேசங்களின் சில வீதிகள் மூடப்படும் அதேவேளை மேலும் சில வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மே 01ம் திகதி கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நடைபெறவுள்ள ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் 2600 பொலிஸார் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 1500 பொலிஸ் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment