தென் கடற்பிராந்தியத்தில் நில அதிர்வு



இலங்கைக்கு தெற்காக அமைந்துள்ள இந்து சமுத்திரத்தில் 5.7 ரிக்டர் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு மாத்தறையிலிருந்து 1498.5 கிலோமீற்றர் தொலைவிலும், தங்காலையிலிருந்து 1504.1 கிலோமீற்றர் தொலைவிலும், வெலிகமவிலிருந்து 1512 கிலோமீற்றர் தொலைவிலும் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வு கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையத்தின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வினால் இதுவரை எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.