கரட் இறுகியதில் குழந்தையொன்று உயிரிழ்ந்த சம்பவமொன்று, அம்பலாந்தோட்டை, மிரிச்சிவிலப் பிரதேசத்தில் (16) இன்று இடம்பெற்றுள்ளது.
ஒரு வயதும் மூன்று மாதங்களுமேயான ஆண் குழந்தையொன்றே, இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்குக் கொடுக்கப்பட்ட உணவில் கரட் துண்டுகள் இருந்துள்ளன. இதனை உட்கொண்ட போதே, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையத்து, அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் உடனடியாக குழந்தையை அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி, குழந்தை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசரணையை, அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment