வவுணதீவு விபத்தில் ஒருவர் பலி; மூவர் காயம்



-வ.துசாந்தன்- 
வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதான வீதியில் நேற்று (14) இடம்பெற்ற விபத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான வயிரமுத்து யோகலிங்கம் என்பவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதியதிலே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த மேலும் மூவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்து தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்