வியட்நாம் பயணமாகிறார் பிரதமர்



பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (16) வியட்நாமிற்கு பயணிக்கவுள்ளார்.
வியட்நாம் பிரதமர் குயென் ஷூஷென் ஃபு வின் அழைப்பை ஏற்று பிரதமர் வியட்நாமிற்கு பயணிக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமரின் விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், பொருளாதாரம், கைத்தொழில் துறைகளில் புதிய உடன்படிக்கைகள் எட்டப்படவுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாமின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
இந்த விஜயத்தில் பிரதமருடன் அமைச்சர்களான மகிந்த அமரவீர, ஹரீன் பெர்னாண்டோ, மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே ஆகியோர் இணைந்துகொள்ளவுள்ளனர்