புதிய வர்த்தமானியால் முஸ்லிம்களுக்கு அநீதி: ஏற்றார் ஜனாதிபதியின் செயலர்



வில்­பத்து வனப்­ப­கு­தி­யுடன் இணைந்த நான்கு வனப் பகு­தி­களைப் பாது­காக்­கப்­பட்ட பிர­தே­ச­மாக பெய­ரிடும் வர்த்­த­மானி அறி­வித்தல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட சதி­யல்ல. ஆனால் இதில் அநீதி நடந்­துள்­ளது என ஏற்­றுக்­கொள்­கிறேன்.
இவ்­வி­வ­கா­ரத்தில் எவ­ருக்கும் பாதிப்­பில்­லாது தீர்­வொன்று விரைவில் பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பி.பி. அபேகோன் தெரி­வித்தார்.
ஜனா­தி­ப­தியின் குறிப்­பிட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்பில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருக்கும் முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் ஜனா­தி­ப­தியின் செய­ல­கத்தில் பேச்­சு­வார்த்­தை­யொன்று நடை­பெற்­றது. இந்தப் பேச்சுவார்த்­தையின் போதே ஜனா­தி­ப­தியின் செய­லாளர் இவ்­வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் தெரி­வித்­த­தா­வது;
ஜனா­தி­ப­தியின் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட வனப்­பி­ர­தே­சங்கள் வன­ஜீ­வ­ரா­சிகள் வல­ய­மா­கவும் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­டு­வ­தற்குத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.
என்­றாலும் அத்­திட்டம் தற்­போது கைவி­டப்­பட்­டு­விட்­டது. ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள வனப் பிர­க­டன வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்­பாக ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி அப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு எவ்­வித பாதிப்பும் இல்­லாத தீர்­வொன்று விரைவில் எட்­டப்­படும்.
முஸ்­லிம்­க­ளுக்கு விரோ­த­மா­கவோ அல்­லது வேறெந்த நோக்­கத்­துக்­கா­கவோ இந்த வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அப்­பி­ர­தேச எல்­லை­களில் வாழும் முஸ்­லிம்­களை பாது­காப்­ப­தற்­கா­கவே இப்­பி­ர­க­டனம் வெளி­யி­டப்­பட்­டது. சில தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ளதை ஏற்­றுக்­கொள்­கிறேன். அத்­த­வ­றுகள் திருத்­திக்­கொள்­ளப்­படும் என்றார்.
இச்­சந்­திப்பில் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், மன்னார் அர­சாங்க அதிபர் வை.தேசப்­பி­ரிய, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், பொரு­ளாளர் மௌலவி கலீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன், உப­த­லைவர் ஹில்மி அஹமட், செய­லாளர் எஸ்.ஏ.அஸ்­கர்கான், சட்­டத்­த­ரணி என்.எம்.ஷஹீட், வன­ப­ரி­பா­லன, வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரிகள், தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்­சாலி, மகா­வலி அபி­வி­ருத்தி அமைச்சு மற்றும் சுற்­றுச்­சூழல் பாது­காப்பு அமைச்சு என்­ப­வற்றின் அதி­கா­ரி­களும் கலந்து கொண்­டனர்.
பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்ட சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் ‘முஸ்­லிம்கள் இப்­பி­ரச்­சி­னையை அமை­தி­யாகத் தீர்த்துக் கொள்­வ­தற்கே எதிர்­பார்க்­கின்­றனர்.
அதனால் 2012 ஆம் மற்றும் 2017 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட வன பிர­க­டன வர்த்­த­மானி அறி­வித்­தல்­களை இரத்துச் செய்ய வேண்டும். அப்­பி­ர­தேச மக்­களின் காணி­க­ளுக்கு உத்­த­ர­வாதம் வழங்க வேண்டும். இதற்­கென்று ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மித்து மக்­களின் கருத்­து­க­ளையும் பெற்று தீர்­வுகள் வழங்­க­வேண்டும் என்று ஜனா­திப­தியின் செய­லா­ள­ரிடம் கோரிக்கை விடுத்­தனர்.
இவ்­வி­வ­கா­ரத்­துக்கு இன்னும் இரு வாரங்­களில் உரிய தீர்வு பெற்­றுத்­த­ரப்­பட வேண்டும். இல்­லையேல் நீதி வேண்டி நீதி­மன்­றத்தை நாட­வுள்­ள­தா­கவும் நாடு தழு­விய ரீதியில் பரந்த போராட்­டங்­களை நடத்­த­வுள்­ள­தா­கவும் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர்.
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரி­விக்­கையில்;
‘யுத்தம் முற்­றுப்­பெற்று எட்டு வரு­டங்கள் கடந்து விட்­டன. என்­றாலும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் இன்னும் முகாம்­களில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.
அவர்­களை மீள் குடி­யேற்­றாது இவ்­வா­றான வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­டு­வது தவ­றாகும். இது பாதிக்­கப்­பட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே வர்த்தமானி அறிவித்தலை உடன் இரத்துச்செய்து சுயாதீன ஆணைக்குழு அமைத்து ஆராயப்பட வேண்டும்’ என்றார்.
முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ்விவகாரத்தை சுமுகமாகத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கியுள்ளனர். இரண்டு வாரகாலத்துக்குள் தீர்வு கிடைக்காது விடின் நாடெங்கும் போராட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
-Vidivelli-