ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான புதிய மாவட்ட அமைப்பாளர்கள்



ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான 7 புதிய மாவட்ட அமைப்பாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பிரகாரம் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக சுமுது விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக எஸ்.கஜந்தன் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக எம். எஸ். சுபைர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக கே.பீ.பிரியந்த பிரேமகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.
பதுளை மாவட்டத்திற்காக ரசிக தேசப்பிரிய ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், குருநாகல் மாவட்டத்தின் புதிய அமைப்பாளர்களாக ஆர் எம் சனத் பத்மசிறி மற்றும் ஏ ஏ ஏ லதீவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.