வசந்தகால நிகழ்வுகள் ஆரம்பம் நுவரெலயிவில்



இலங்கையில் குட்டி லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியா நகரில் வசந்தகால நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நுவரெலியா மாநகர சபை ஆணையாளர் ருவன் ரத்நாயக்கவினால் வசந்தகால நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது பல கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இந்த நிகழ்வில் 47 பாடசாலைகளும், 54 குழுக்களுடன் 1846 பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது.
இதேவேளை, இன்று ஆரம்பமாகும், வசந்த கால நிகழ்வுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.