சீனாவில் முஸ்லிம்கள் நீளமாக தாடி வளர்க்க தடை





இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகள் கூறும் நடவடிக்கையால், சீனாவின் மேற்கு பிராந்தியத்தியமான ஜின்ஜியாங்கில் புதிய சட்டங்கள் அமலாகியுள்ளன.
புதிய சட்டத்தின்படி, உய்குர் இனத்தை சேர்ந்த முஸ்லிம்கள், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் துணியை அணிவது மற்றும் வழக்கத்திற்கு மாறாக நீளமான தாடி வளர்ப்பது ஆகியவற்றின் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தற்போது முதல் உய்குர் முஸ்லிம் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்க கட்டாயப்படுத்தப்படுவார்கள்.