போக்குவரத்தில் சிக்கல் இல்லை



பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும்  பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக, பஸ் மற்றும் ரயில் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகிஷ்கரிப்பு இடம்பெறும் இரண்டு தினங்களுக்கும் தேவையான எரிபொருளை சேமித்து வைத்திருப்பதாக, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.