(சுலைமான் றாபி)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூரில் சற்று முன்னர் Mobile Bakery வாகனத்தில் நசுக்குண்டு நிந்தவூர் 09ம்பிரிவைச் சேர்ந்த அஜ்மல் ஹம்தி எனும் ஒன்றரை வயது குழந்தை பலியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது :
சம்மாந்துறை தனியார் வெதுப்பகமொன்றின் சிறியரக வடி வெதுப்கப் பொருட்களை விற்பனை செய்யும் வேளையில் குறிப்பிட்ட குழந்தையின் பெற்றோர் பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டிருக்கும் வேளை விபத்தில் பலியான குழந்தை வாகனத்தின் டயர்பகுதியில் இருந்ததாகவும், பொருட்களை விற்பனை செய்த பின்னர் வாகனத்தைச் செலுத்திய வேளை டயரில் சிக்குண்டு குழந்தை பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment
Post a Comment