முக்கிய பிரச்சினையாக காணப்பட்ட குப்பை விவகாரம் தொடர்பில் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் உரிய தீர்வு வழங்கவில்லை என, மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
குப்பை விவகாரம் நாட்டின் தேசியப் பிரச்சினை எனக் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 69 ஆண்டுகளாக எந்தவொரு அரசாங்கமும் இதற்கு தேசிய ரீதியிலான தலையீட்டை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ ஐக்கிய தேசியக் கட்சியோ குப்பை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்கவில்லை எனவும், குப்பைகளை மீள் சுழற்சி செய்வது தொடர்பிலான வேலைத் திட்டத்தை அறிமுகம் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
2008ம் ஆண்டு கொலன்னாவ - மீதொட்டமுல்லை பகுதியில் கொழும்பு நகரின் குப்பைகளை கொட்ட ஆரம்பித்தனர். 1976ம் ஆண்டு முதல் கொலன்னாவ நகர சபை குப்பைகள் மட்டுமே அங்கு கொட்டப்பட்டன. முன்னதாக கொழும்பு நகரின் குப்பைகளை சேகரித்து வந்த புளுமென்டல் பகுதியில் காணப்பட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக மீதொட்டமுல்லை பகுதியை தெரிவு செய்தனர்.
அப்போது அந்தப் பகுதி சன நெரிசலுள்ள பகுதி என்பதால், அங்கு குப்பை போட வேண்டாம் என மக்கள் எதிர்த்தனர். குப்பை போடுவது குறித்து கொலன்னாவ நகர சபையில் கொண்டுவரப்பட்ட விஷேட யோசனையை எதிர்த்தது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக இருந்த தம்மிக்க விஜயமுனி மட்டுமே. ஏனைய கட்சிகள் இரண்டும் ஆதரித்தன.
மக்கள் இதனை எதிர்த்துப் போராடினர். கோட்டாபய ராஜபக்ஷ இராணுவம், பொலிஸாரை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி குப்பை கொட்டினார். சில வருடங்களில் அங்கு குப்பை மேடு உண்டானது. இறுதியில் குப்பை மேடு சரிந்து விழுந்து பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை அரசாங்கம் கட்டுப்படுத்தியிருக்கலாம். கொலன்னாவ நகர சபை, மேல் மாகாணசபை, அரசாங்கம் என்பன இதனை கவனத்தில் கொல்லவில்லை.
தற்போது அரசாங்கம் தீர்வு எனக் கூறி மற்றுமொரு பிளாஸ்டரை ஒட்டப் போகிறது. இந்தக் குப்பைகளை பிறிதொரு இடத்திற்கு கொண்டு செல்லப் போகிறது. முன்னர் இருந்த அரசாங்கம் புத்தளத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டனர். தற்போதைய அரசாங்கம் ஏகல பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.
அப் பகுதியானது மக்கள் அதிகமுள்ள பிரதேசம், மறுபுறத்தில் அத்தனகளுஓயா உள்ளது. சிறு மழைக்கும் வௌ்ளம் ஏற்படும். இதனால் அனர்த்தம் உண்டாகும். எனவே தான் ஏகல மக்கள் மீதொட்டமுல்லை குப்பைகளை வேண்டாம் என்கின்றனர்.
அரசாங்கம் முயற்சிப்பது மீதொட்டமுல்லை பிரச்சினையை ஏகலவுக்கு கொண்டு செல்வதே, அது பதில் இல்லை.
மறுபுரத்தில் கொழும்பு குப்பைகளை கரதியான பகுதிக்கு கொண்டு செல்ல முற்படுகின்றனர். அங்கும் இலட்சக்கணக்கான டொன் குப்பைகள் சேர்ந்துள்ளன. மக்கள் அதிகமுள்ள அப் பகுதியில் பொல்கொட ஓயா உள்ளது. இதனால் தான் கட்சி பேதமின்றி பொதுமக்கள் இதனை எதிர்க்கின்றனர்.
அரசாங்கத்திலுள்ள தலைவர்கள் கூறுகின்றனர் இது அரசியல் தூண்டுதல் என்று, தமது இயலாமையையே இதன் மூலம் அரசாங்கம் சொல்ல முற்படுகின்றது.
இது சரியாக தமது தோட்டத்திலுள்ள குப்பைகளை அடுத்தவரின் தோட்டத்தில் இட்டு தப்பிப்பது போன்ற செயல். இது பிரச்சினைக்கான தீர்வல்ல, எனக் கூறியுள்ளார்.

Post a Comment
Post a Comment