லிவிஸ் அதிரடி : பாகிஸ்தானை வீழ்த்தியது மே. தீவுகள் (காணொளி இணைப்பு)



பாகிஸ்தான் அணிக்கெதிரான 3 ஆவது இருபதுக்கு-20 போட்டியில் மே.தீவுகள் அணி 7 விக்கட்டுகள் மற்றும் 31 பந்துகளினால் அபார வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் கம்ரன் அக்மல் 48 ஓட்டங்களையும், பாபர் அஷாம் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில் 138 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 14.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.
மே.தீவுகள் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இவைன் லிவிஸ் 51 பந்துகளில் 9 ஆறு ஓட்டங்கள் மற்றும் 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 91 ஓட்டங்களை குவித்தார்.
இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக இவைன் லிவிஸ்  தெரிவுசெய்யப்பட்டார்.
இருபதுக்கு-20 தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என முன்னிலை வகிப்பதுடன், தொடரை தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது.