மறிச்சுக்கட்டிக்காக, வீதியில் மடித்துக் கட்டிய மன்னார் மக்கள்



மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேச மக்கள் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஜும்ஆ தொழுகைக்கு பின் ஆர்ப்பாட்டம்.
வில்­பத்து சர­ணா­ல­யத்­துக்கு வடக்கே அமைந்­துள்ள வடக்­காக அமைந்­துள்ள மாவில்லு, வெப்பல், மறிச்­சிக்­கட்டி, விளாத்­திக்­குளம், பெரி­ய­மு­றிப்பு ஆகிய பாது­காக்­கப்­பட்ட வனங்கள் இணைக்­கப்­பட்டு வன பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் ‘3அ’ பிரிவின் கீழ் ‘மாவில்லு பாது­காக்­கப்­பட்ட வனம்’ என பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன தனது ரஷ்ய விஜ­யத்­தி­னி­டையே கையொப்­ப­மிட்டார்.